காமராஜரை திட்டி தீர்த்த அரசியல்வாதி

Kamaraj_EVK_Sampath_EPS

காமராஜரை பற்றி ஒரு அரசியல்வாதி கூறியது:

ஏழை பங்காளா உனக்கெதுக்கு லண்டனில் ஏழெட்டு பங்களா?

காமராஜரின் ரஷ்யா பயணத்தின் போது, அவர் நிறம் கருப்பு என்பதால்.. “முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை மாட்டு தோல் தான் ஏற்றுமதி ஆகும், தற்போது எருமை மாடே ஏற்றுமதியாகிறது” என்றும் கூறியுள்ளார் அந்த அரசியல்வாதி.

ஏழை தாயின் மகன் என்பதால் “கருவாட்டுக்காரியின் மகன்” என்றும்,
நாடார் என்பதால் “கள்ளத்தராசு” என்றும்,
‘கட்ட பீடி, கிழவன்’ என்றும்,
திருமணம் செய்து கொள்ளாததால் ‘அலி’ என்றும்,
நாடார்களின் குலத்தொழில் பனை ஏறுதல் என்பதால் ‘பனையேறி’ என்றும் கூறியுள்ளார் அந்த அரசியல்வாதி.

காமராஜர் ஒரு கிறித்தவ நாடாரை எதிர்த்து நாகர்கோவிலில் போட்டியிட்டதால், “கிறித்தவ நாடார்களின் ஒட்டு மேரியின் மகனுக்கா? இல்லை அந்த சிவகாமியின் மகனுக்கா?” “உங்கள் ஓட்டு வந்த நாடாருக்கா சொந்த நாடருக்கா?” என்று அயராமல் பிரச்சாரம் செய்தவர்.

சாகும் போது காமராஜரிடம் இருந்தது வெறும் 100 ரூபாய், அப்பேர்பட்டவரை “ஹைதராபாத் வங்கிகளில் கோடி கோடியாய் வைத்துள்ள காமராஜர்” என்றும் கூறியுள்ளார் அந்த அரசியல்வாதி.

தன் வாழ்நாள் முழுவதும் சிறு சுயநலம் கூட இல்லாமல் இந்திய மக்கள் நலனுக்காக உழைத்த காமராஜர் அவரது 72வது வயதில், தூங்கும் போது எந்த ஒரு சலனமோ வலியோ இல்லாமல் உயிர் துறந்தார், கட்சி பாகுபாடின்றி தமிழ்நாடே அவருக்காக கண்ணீர் விட்டது. அவரை திட்டியே அரசியல் செய்த அந்த அரசியல்வாதி தனது 94வது அகவையில் கவலைக்கிடமாக காவேரி மருத்துவமனையில் இருக்கிறார். இன்று அந்த அரசியல்வாதி மடியவேண்டும் என்று பலர் விரும்புகின்றனர், மீம்ஸ் போடுகின்றனர், இதில் எனக்கு உடன்பாடில்லை. அவரை பற்றி எழுதும் அளவுக்கு அவர் பெரிய மனிதர் இல்லை என்பதால் நான் அவரை பற்றி எழுதியதில்லை, இன்றும் எழுதவேண்டாம் என்றே நினைத்தேன். ஆனால்… 10 வருடங்களாக நடக்க முடியாத ஒரு 94 வயது முதியவருக்கு மரணம் தண்டனை அல்ல. அவருக்கு முழு சுய நினைவு திரும்பி இன்னும் பல்லாண்டு வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.