The Dangers of WhatsApp Facebook Health Forwards

Krithiga_pregnant_tirupur

“Cancer is not a disease. Alkaline food can cure it.”

“No surgery needed for kidney stones, coriander can cure it.”

“You don’t need a hospital for delivering a baby, they are just robbing your money.”

“For diabetes you should eat jaggery or palm sugar instead of white sugar.”

These are all misconceptions and outright lies and sharing such messages is not only irresponsible but can also prove fatal

So please stop forwarding such messages. A couple in Tirupur attempted home birth by watching youtube videos only for the mother to bleed-out and die. 50 years back women were healthy and due to their daily strenuous work, all their muscles were fully developed and strong, that is not the case today, girls are physically weak, less flexible, carry a poor standing and sitting posture and not all their muscles are fully developed. Above all, we don’t have experienced women to help during deliveries. Avoiding C-section is good but avoiding a hospital altogether can be dangerous.

Movies are only for entertainment, and not for life lessons, it is rumored that the husband was a fan of Samuthirakani and decided on homebirth due to the movie Appa, in which Samuthirakani says that hospitals are cheating you and you don’t need hospitals for child birth.

Not all doctors are villains as portrayed in the tamil movies, most doctors work their asses off and earn lesser than what a software engineer would. They work odd hours and sacrifice their family time for the well-being of their patients. Average life expectancy of an Indian 50 years back was 42 and today it is 68, and this could not have happened without reducing the infant mortality rate, and thanks to our governments and hospitals for making this possible. I am all for wholesome natural organic food, a balanced diet and physical exercises, but in today’s world that alone is not sufficient, you need hospitals.

“புற்றுநோய் ஒரு நோயே அல்ல. ஆல்கலைன் உணவால் அதை பூரணமாக குணப்படுத்த முடியும்!”

“சிறுநீரக கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவையே இல்லை , கொத்தமல்லியை அரைத்து குடித்தால் போதும்!”

“பிரசவத்திற்கு மருத்துவமனை தேவையே இல்லை, பணம் பறிப்பதற்காகவே மருத்துவமனைக்கு வர சொல்கின்றனர்!”

“சர்க்கரை நோயிற்கு சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது கருப்பட்டி சாப்பிட வேண்டும்!”

இது போன்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். திருப்பூரில் ஒரு தம்பதியர் வீட்டிலேயே பிரசவம் பார்க்க YouTube வீடியோக்களைப் பார்த்து முயன்றுள்ளனர், அம்முயற்சியில் அந்த பெண் மிக அதிக ரத்த கசிவால் பரிதாபமாக இறந்து விட்டார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தனர் மற்றும் தினசரி கடுமையாக வேலை செய்தனர், அதன் காரணமாக அணைத்து தசைகளும் அவர்களுக்கு வலுவாக இருந்தன, ஆனால் இன்றைய நிலைமை வேறு. பெண்கள் உடல் ரீதியாக பலவீனமாகவும், உடல் நெகிழ்வுத்தன்மை இல்லாமலும் இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரசவம் பார்க்கும் அனுபவம் வாய்ந்த பெண்கள் இன்று இல்லை.

பிரசவத்தின் போது சி-section தவிர்த்தல் நல்லதுதான், ஆனால் மருத்துவமனையையே முற்றிலும் தவிர்த்தல் மிகவும் ஆபத்தானது.

இந்த சம்பவத்தில் கணவன் சமுத்திரகனியின் ரசிகன் என்று ஒரு வதந்தியும் உலவுகிறது.

“Hospital எல்லாம் ஏமாத்துகாரங்க நம்ம வீட்டிலே பிரசவம் பாக்குறது தான் best” னு அப்பா’ படத்துல காட்சி வச்சார் சமுத்திரக்கனி. திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே, வாழ்க்கை பாடங்களுக்கு அல்ல.

நீங்கள் ஒரு மருத்துவர் இல்லை என்றால் மருத்துவம், அறுவை சிகிச்சை, நோயிர்க்கான மருந்து முதலியவை பற்றி பதிவிடுவது அவசியம் அற்றது, யார் பதிவிட்டார் என்று தெரியாமல் அதை பகிர்வதும் தவறு. ஒரு தவறான பதிவால் ஒரு உயிர் போகலாம்.

அனைத்து டாக்டர்களும் தமிழ் திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் வில்லன்கள் போன்றவர்கள் அல்ல. பெரும்பாலான டாக்டர்கள் காலை முதல் இரவு வரை அயராது உழைக்கின்றனர். ஒரு சாப்ட்வேர் என்ஜினீரை காட்டிலும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நோயாளிகள் நலனுக்காக தங்கள் குடும்ப நேரத்தை தியாகம் செய்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இந்தியனின் சராசரி வாழ்நாள் 42 வருடம், இன்று அது 68 வருடங்கள். குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததே இதற்க்கு முக்கிய காரணம். இது நம் அரசாங்கங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்த மிக பெரிய சாதனையே ஆகும்.

அனைத்து ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவும், உடல் பயிற்சியும் மிகவும் முக்கியம் தான்,  ஆனால் இன்றைய உலகில் இது மட்டும் போதாது மருத்துவமனைகளும் வேண்டும்.